ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும்: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்




ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், 2016ல் தொடங்கப்பட்ட 'உதான்' திட்டத்தின் கீழ் தேவைக்கு ஏற்ப நகரங்களை இணைக்க கூடிய வகையில் விமான சேவை நடந்து வருகிறது. உதான் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் உள்ள கடலோர காவல் படை விமானத் தளத்தில் இருந்து விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் இருந்து சென்னையை இணைக்க கூடிய வகையில் விமானத்தை இயக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்ட 180 நாட்களுக்குள் அல்லது விமான நிலையம் தயாராகி 2 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு விமான நிறுவனம், விமானத்தை இயக்க ஒன்றிய அரசு அனுமதி தரும் என தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் இருப்பதால் சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு விமான சேவை தொடங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments