கோபாலப்பட்டிணம் பழைய காலனி தோப்பு சாலையில் புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கத்தை தொடங்கி வைத்த ராமச்சந்திரன் MLA!கோபாலப்பட்டிணம் பழைய காலனி பகுதியில் நீண்ட நாள்களாக லோ வோல்டேஜ் எனப்படும் குறைந்த மின்னழுத்த காரணமாக கிராம மக்கள் அடிக்கடி மின்சாரம் தடைபட்டு அவதிப்பட்டு வந்தனர்.ஆகையால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பழைய காலனி தோப்பு சாலையில் நேற்று பிப்ரவரி 03  வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைக்க புதிய டிரான்ஸ்பார்மர் செயல்பாட்டிற்கு வந்தது.

இந்நிகழ்வில் ஊராட்சி நிர்வாகிகள் ,அரசு அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் ,  அரசியல் கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
 
மேலும் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments