சென்னை - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை புதிய ரயில் பாதை; மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு
சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூா் வரையிலான புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றுள்ளாா்.

சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூா் வரையிலான புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறியிருப்பதாவது: “புதுச்சேரி, தமிழக மக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பான சென்னை – புதுச்சேரி- கடலூா் இடையிலான ரயில் சேவையை தொடங்கக்கோரி மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ், இணையமைச்சா் ராவ் சாகப் பாட்டீல் தான்வி ஆகியோருக்கு அண்மையில் கோரிக்கைக் கடிதம் அளித்தேன். அதையேற்று, ரயில் பாதைப் பணியை தொடங்க நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய ரயில்வே அமைச்சா் மற்றும் ரயில்வே இணையமைச்சா் ஆகியோருக்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments