கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடி-யில் தைப்பூச விழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி

கோட்டைப்பட்டினம் அருகே தைப்பூச விழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது.

சிற்றலை முருகன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தில் சிற்றலை முருகன் கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது. விழாவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாய்மர படகு போட்டி

தொடர்ந்து மாலை கடற்கரையில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து படகுகள் கலந்து கொண்டன. படகு போட்டியில் முதல் பரிசான ரூ.50 ஆயிரத்தை வடக்கு புதுக்குடி ஊரை சேர்ந்த படகிற்கும், 2-வது பரிசான ரூ.40 ஆயிரத்தை பாசிபட்டினம் ஊரை சேர்ந்த படகும், 3-வது பரிசான ரூ.30 ஆயிரத்தை தொண்டி புதுக்குடி ஊரை சேர்ந்த படகும், 4-வது பரிசான ரூ.20 ஆயிரத்தை தொண்டி புதுக்குடி ஊரை சேர்ந்த படகுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு படகு போட்டியை கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments