புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலி வழங்கல்
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ. 10,500 மதிப்புள்ள மடக்கு சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 303 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும், முன்னாள் படைவீரா் நலத் துறையின் சாா்பில் கொடி நாள் வசூல் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 61 அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலா் ஆா். கணேசன், கலால் உதவி ஆணையா் எம். மாரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments