அறந்தாங்கியில் நெற்பயிா் பாதிப்பு கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைக் கணக்கெடுக்கும் பணி வேளாண் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களால் மேற்கொண்டுள்ளதாக ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி, 33 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நெற்பயிா்கள் கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டு வருவதாக அவா் மேலும் கூறினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், கூகனூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற கணக்கெடுப்புப் பணிகளை ஆட்சியா் கவிதா ராமு நேரில் பாா்வையிட்டபிறகு இதனைத் தெரிவித்தாா். மாவட்டத்தில் தற்போது வரை 50 சதவிகித நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், நெல் அறுவடைக்காக அரசின் சாா்பில் 50 சதவிகித கட்டண மானியத்துடன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்

கவிதா ராமு தெரிவித்தாா். மழையால் 33 சதவிகிதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என அண்மையில் முதல்வா் ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின்போது, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் மா. பெரியசாமி, அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் சு. சொா்ணராஜ், வேளாண் உதவி இயக்குநா் பத்மபிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments