மீனவ நண்பன் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க 28-ந் தேதி கடைசி நாள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 மீனவ கிராமங்களில் மீனவ நண்பன் திட்டத்தில் காலியாக உள்ள கீழக்குடியிருப்பு, துளசிப்பட்டினம், வடக்கு மணமேல்குடி, மேலஸ்தானம், மும்பாலை ஆகிய 5 மீனவ கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீனவ நண்பர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது. மீனவர்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்து இவர்கள் பணியை மேற்கொள்வார்கள். இப்பணியில் சேர்வதற்கான கல்வி தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு 1.7.2022 -ல் உள்ளவாறு 35 வயதுக்கு மேற்படக்கூடாது. தகுதியுள்ள நபர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 93848 24268 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments