அதானி குழுமத்திடம் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த கோரி இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
அதானி குழுமத்திடம் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா்கள் கே.ஆா். தா்மராஜன், ஏ. ராஜேந்திரன், விவசாயிகள் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினா் மு. மாதவன், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏஎல். ராஜு, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் ப. ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

இதில், மத்திய அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments