மணமேல்குடி ஒன்றியத்தில் தலைமை ஆசிரியர்களுக்கான தற்காப்பு கலைப் பயிற்சி கூட்டம்
மணமேல்குடி ஒன்றியத்தில்   தலைமை ஆசிரியர்களுக்கான  தற்காப்பு கலைப் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்நிலை உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான கூட்டம் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய  திரு இந்திராணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அரசு மேல்நிலை உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளில்  ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றும்  இப் பயிற்சியில் மாணவிகளுக்கு கராத்தே ஜூடோ டீக்வொண்டோ இவற்றுள் ஏதேனும் ஒரு பயிற்சியினை மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும் , பள்ளி அளவில் ஒரு பொறுப்பு பெண் ஆசிரியை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் மாணவிகளுக்கு வழங்கப்படும் கராத்தே பயிற்சி வழங்கப்படும் விவரத்தினை பள்ளி மேலாண்மை குழு  மூலம் தீர்மானங்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்றுநர்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சியில் மாணவிகளின் வருகை பயிற்றுநர்கள் வருகை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டன. மேலும் இப்பிற்சியினை தலைமை ஆசிரியர்கள் மற்றும் கராத்தே பயிற்றுநர்கள் மாணவிகளுக்கு சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது இக்கூட்டத்தில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை உயர்நிலை பொறுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments