திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விபத்து பகுதியான மாத்தூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து ஆவூர் பிரிவு சாலை வரை அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் போலீசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டுவேலன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் ஏற்கனவே பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா சாலை விரிவாக்க பணியின் போது அப்புறப்படுத்தியதை மீண்டும் அப்பகுதிகளில் பொருத்தி சாலை போக்குவரத்தை கண்காணித்து விரைவில் விபத்தில்லா பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். ஆய்வின் போது மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments