8 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள்! மஜக தஞ்சை தெற்கு மாவட்ட ஆலோசனைகூட்டம்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் IT WING செயலாளர் JS. சாகுல் ஹமீது ( வாஹித் )தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை சேக் முன்னிலை வகிதார் மஜக சார்பில் கட்சியின் 8ஆண்டு துவக்க விழாவையோட்டி வரும் மார்ச் 10-03-23ஆம் தேதி அதிரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும்  கொடியேற்றும் நிகழ்வுகள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும்,  அதிரை நகர பொருளாளராக HI5 T.ரிஸ்வான் அகமது,நகர அவைத் தலைவராக A.ஹலீல் ரஹ்மான்,நகர தொண்டர் அணி செயலாளராக J.ராவுத்தர்,நகர மருத்துவஅணி செயலாளராக A.முகமது அஜ்மல் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் 

இதில் கீழ்கண்ட தீர்மானம் முடிவு செய்யப்பட்டது.

1. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் தலைமை நிர்வாகக்குழு எடுக்கும் முடிவுகளின் படி   கட்சி பணிகளை செயல்படுத்துவது  என முடிவு செய்யப்பட்டது.

2.மனிதநேய ஜனநாயக கட்சியின் 8 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வரும் 10/03/2023 அன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

3. ' மக்களுடன் மஜக' என்ற  செயல்திட்டப்படி  ஊரில் உள்ள பிரச்சனைகளை அறிந்து அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்து சரி செய்வது என முடிவு செய்யப்பட்டது.

4. நகர நிர்வாக வாட்ஸ் அப் குழுமத்தில் கட்சியை பற்றி அவதூறு செய்பவர்களை குழுமத்தில் இருந்து அட்மின் மூலம் நீக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிரை நகர செயலாளர் #அதிரை_B.மர்ஜிக்_B.Com மற்றும்  நகர துணை செயலாளர் N.முகமது பாசித் ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி

#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு _மாவட்டம்
16-02-2023
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments