5000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட கோபாலபட்டிணத்தை தனி ஊராட்சியாக அரசு அனுமதித்து ஆணை வழங்கிட தமிழக முதல்வருக்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA கடிதம்




5000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட கோபாலபட்டிணம் எனும் ஊரை தலைமையிடமாக கொண்டு கோபாலபட்டிணம் தனி ஊராட்சியாக அரசு அனுமதித்து ஆணை வழங்கிட தமிழக முதல்வருக்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்  ST ராமச்சந்திரன் MLA கடிதம் எழுதியுள்ளார்..

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

வணக்கம். எனது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாட்டாணி - புரசக்குடி ஊராட்சி தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஊராட்சி மன்றங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய 12 கிராமங்களை சேர்ந்த பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கீழ்கண்டவாறு இரண்டாக பிரித்து நிறைவேற்றித்தரக் கேட்டுக் கொள்கிறேன்.

சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட கோபாலபட்டிணம் எனும் ஊரை தலைமையிடமாக கொண்டு கோபாலபட்டிணம் ஊராட்சி என்றும் மீதமுள்ள கிராமங்கள் சேர்த்து ஏற்கனவே உள்ளபடி நாட்டாணி - புரசக்குடி ஊராட்சி என்றும் இரண்டு ஊராட்சிகளாக செயல்பட அரசு அனுமதித்து அதற்கான ஆணை வழங்கிட வேண்டுமென்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

நன்றி

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments