அறந்தாங்கி அருகே ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை
அறந்தாங்கி அருகே ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (60), இவர் இரும்புக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று ரெத்தினக்கோட்டைக்கு தனது மிதிவண்டியில் சென்று அருகே இருந்த தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். 

அப்போது அவ்வழியாக காரைக்குடியிலிருந்து திருவாரூர் மார்க்கமாக சென்ற ரயில் அவர் மீது ஏரியுள்ளது. இதில் கிருஷ்ணமூர்த்தியின் தலை துண்டிக்கப்பட்டு அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார்.  இதில் அவரது தலை துண்டிக்கப்பட்டு உடலும், தலையும் தனித்தனியாக தண்டவாளத்தில் கிடந்தது

இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பட்டுக்கோட்டை ரயில்வே போலீசார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ரயில் ஆர்வலர் ஆலத்தம்பாடி வெங்கடேசன் அவர்கள் கூறியதாவது

சமீப நாட்களாக திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி ரயில் வழித்தடத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்புகள் நிகழ்வதும், கால்நடைகள் அடிபட்டு உயிரிழப்பதும் தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து நான் கடந்த 09-02-2023 அன்றே சமூக வலைதளங்கள் வாயிலாக விழிப்புணர்வு பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தேன். ஆனாலும் கிராமப்புற மக்களிடம் விழிப்புணர்வு இல்லை.

பெரும்பாலும் கால்நடைகளை இருப்புபாதை அருகே விளைநிலங்களில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு ரயில் பாதையில் அல்லது பாதை அருகே அமர்ந்து இருப்பவர்கள் தான் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். நேற்றையதினம் மாலை காரைக்குடி - திருவாரூர் முன்பதிவில்லா சிறப்பு விரைவு கட்டண ரயிலில் அறந்தாங்கி அருகே நடைபெற்ற விபத்தும் அத்தகையதாகவே தோன்றுகிறது.

காரைக்குடி திருவாரூர் தடத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவைகள் இயக்கப்படுவதால் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. அப்போதைய மீட்டர் கேஜ் பாதை ரயில்கள் குறைவான வேகத்திலேயே இயங்கின.

தற்போது இயக்கபடும் ரயில்கள் நமது தடத்தில் 90 Kmph வரை இயங்குகிறது. உள்ளாட்சி மன்றங்கள் மூலமாக கிராமப்புற பகுதிகளில் தண்டோரா அடித்து எச்சரிக்கை செய்திட ஆவன செய்திட வேண்டும். ரயில் பாதைகள் தொடர் வண்டிகள் பயணிப்பதற்காகவே அவை பாதசாரிகளுக்கான நடைபாதை அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். ரயில்பாதைகளில் நடப்பதும், அனுமதியின்றி கடப்பதும் ரயில்வே சட்டப்படி குற்றம்.

பாதுகாப்புடன் இருப்போம். சீரான ரயில் சேவைகள் நடைபெற ஒத்துழைப்பு அளிப்போம்.

அறந்தாங்கியை  சேர்ந்த ரயில் ஆர்வலர் முருகானந்தம் அவர்கள் கூறியதாவது

திருவாரூர் செல்லும் விரைவு இரயிலில் அறந்தாங்கி அருகே  நேற்று ஒரு நபர் இரயிலில் அடிப்பட்டு இறந்துள்ளார்.இது இரண்டாவது முறையாக நடந்துள்ளது.

அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கலைக் கல்லூரி மாணவர்கள் ஒரு சிலர் அறந்தாங்கி இரயில் தண்டவாளங்கள் வழியாக நடந்து வருவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.

தற்போது அறந்தாங்கி வழியாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சரக்கு இரயில்கள் மற்றும் பயணிகள் இரயில்கள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல அறந்தாங்கி வழியாக நாள் ஒன்றுக்கு 10 க்கு மேற்பட்ட சரக்கு இரயில்கள் இயக்கப்படுகிறது எனவே மாணவர்கள் இரயில் தண்டவாளங்கள் வழியாக நடந்து செல்வதை தவிர்க்கவும்....

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments