இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் SPP சமூக ஆர்வலர்கள் சங்கம் துவங்கப்பட்டு குறுகிய காலங்களில் மக்களுக்கு தேவையான பணிகளை திருவாடானை ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தோடு இணைந்து செய்து வருகிறார்கள்.
அதில் ஒரு சில அரசின் மூலம் வழங்கப்படும் சலுகைகளான முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பெண்கள் வாழ்வாதார உதவித்தொகை, கைம்பெண்கள் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, மகளிருக்கான அரசின் மூலம் வரும் உதவித்தொகை அனைத்தையும் பெற்றுக்கொடுப்பது மற்றும் இன்னும் பல பணிகளை உன்னதமாக எஸ்.பி.பட்டினத்தில் இந்த சங்கம் செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் சிறப்பான பணிகளை மேற்கொள்ள 18-02-2023 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல் சலாமத் மேல் தளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தை திருவாடனை ஒன்றிய பெருந்தலைவர் திரு.ப.முகம்மது முக்தார் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் எஸ்.பி.பட்டினம் ஜமாஅத் நிர்வாகத்தினர் மற்றும் துனை செயலாளர் ரபீக், எஸ்.பி.பட்டினம் ஊராட்சி மன்றம் தலைவி திருமதி.சுலைஹா சாதிக், 2-ஆம் வார்டு உறுப்பினர் குதுப்தீன், புல்லக்கடம்பன் ஊராட்சி மனற தலைவி திருமதி.ராதகா கண்ணன், வட்டானம் கூட்டுறவு சங்கத்தலைவர் ஹைதர் அலி, சமூக ஆர்வலர்கள் குழுவின் சிறப்பு ஆலோசகர்கள் எக்ஸ்பிரஸ் சகுபர் அலி, அக்பர் பாதுஷா ஆகியோர் இவ்விழாவில் முன்னிலை வகித்தனர்.
சமூக ஆர்வலர்கள் சங்கத் தலைவர் ஜலால் வரவேற்புரையாற்ற, செயலாளர் ஷாஜஹான் பல பணிகள் குறித்து எடுத்துரைதார். நிர்வாக ஆலோசகர் கலந்தர் குவைத் சாதனை செய்த மக்கள் பணிகள் குறித்து சிற்றுறை நிகழ்த்தினார். சிறப்பு ஆலோசகர் அக்பர் பாதுஷா நன்றியுரை நிகழ்த்தினார்.
நிர்வாகிகள், திரு. சகுபர் அலி-பொருளாளர், திரு.ஹபீப் முகமது,திரு. கபீர் அகமது, திரு. S.P. அக்பர் சாதலி, திரு. டிராவலஸ்
முஜிப் ரஹ்மான், திரு.பாக்கர் அலி, திரு.ராசிக் அலி மற்றும் பொதுமக்கள் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல்:
SPP.MEDIA SADIQ, சமூக ஆர்வலர்கள் சங்கம், எஸ்.பி.பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.