அதிராம்பட்டினத்தில் அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற கோபாலப்பட்டிணம் மாணவர்
தஞ்சாவூர் மாவட்டம்  அதிராம்பட்டினம் அல் மத்ர ஸதுர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி மௌலவி, ஆலிம் பட்டமளிப்பு விழா ஹிஜ்ரி 1444 ரஜப் பிறை 09 / 19/02/2023 ஞயிற்றுகிழமை காலை மதரஸா வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அல் மதரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  அதிராம்பட்டினம் மரைக்காயர் பள்ளி இமாம் மௌலவி அல் ஹாபிழ் அப்துல் காதிர் ஆலிம் கிரா அத் ஒதி துவக்கி வைத்தனர் அதிராம்பட்டினம்  அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர்  மெளலானா ,மௌலவி  முஹம்மது நெய்னா ஆலிம் வரவேற்று பேசினார்.

மௌலானா, மௌலவி அல்ஹாஜ் ஷைஹுல் ஜாமிஆ அல்லாமா கே.டி. முஹம்மது குட்டி பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்கள் மாணவர்களுக்கு  ஸனது வழங்கி  பேரூரை யாற்றினார் பின்பு சிறப்பு அமைப்பாளராக கலந்து கொண்ட சென்னை அல்ஹுதா அரபிக் கல்லூரி தலைமை இமாம் குராஸானி பீர் பள்ளி மௌலானா, மௌலவி  அல்ஹாபிழ் டாக்டர் எம். ஸதீதுத்தீன் ஆலிம் பாஜில் பாகவி சிறப்புரை ஆற்றினார்கள்

இதில் அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர் உட்பட 7 பேர் பட்டம் பெற்றார்கள்..

மெளலவி A. சேக் அப்துல்லா 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகிலுள்ள கோபாலபட்டினம் காட்டுக்குளம்  தெருவைச் சேர்ந்த  (அரக்காசு  வீடு)  மர்ஹும் அப்துல் லத்தீஃப்,   அவர்களின் மகன் வழி பேரனும் ரகுமத் அலி  அவர்களின் மகள் வழி பேரனும் A. அப்துல் சத்தார்  A. தௌலத் நிஷா தம்பதியினரின் மகன் மெளலவி  A.சேக் அப்துல்லா ரஹ்மானி  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம்  
அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரியில் பயின்று  பட்டம் பெற்றுள்ளார்கள்...எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments