இறையூர், வேங்கைவயல் கிராமத்தில்,குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்; புதுக்கோட்டை கலெக்டர், எஸ்.பி-க்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்




புதுக்கோட்டை மாவட்டம், இறையூர், வேங்கைவயல் கிராமத்தில், குடிநீரில் மர்ம நபர்கள் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட 50 நாள்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை.

``கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை, ஏன் இதுவரையிலும் கைதுசெய்யவில்லை" என்ற கேள்வியைப் பலரும் எழுப்பிவருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து, தேசிய பட்டியலின ஆணைய துணைத் தலைவர் அருண் ஹோல்டரை, டெல்லியில் சந்தித்து விசாரணையை துரிதப்படுத்தக் கோரி மனு அளித்திருந்தார்.

இதற்கிடையே, தனிப்படை போலீஸாரைப் போன்றே, சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், பட்டியல் சமூக மக்களே குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டுவதாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில், ``குற்றவாளிகளை ஏன் இதுவரையிலும் கைதுசெய்யவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, 15 நாள்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும்" என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோருக்குப் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments