புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களில் 25-ந்தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவு




திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களிலும் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும் என்று திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

1947-ம் ஆண்டு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அனைத்து கடைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர் முற்றிலும் அரசாணையின்படியும், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பண்பாட்டுத்துறை அறிவுரையின் படியும் 5:3:2 என்ற விகிதத்தில் முதன்மையாக தமிழில் பெரிய எழுத்துகளிலும், இரண்டாவதாக ஆங்கிலத்திலும், மூன்றாவதாக அவரவர் விரும்பும் பிற மொழிகளில் அனைத்து நிறுவனங்களிலும் பெயர்ப்பலகை வருகிற 25-ந் தேதிக்குள் வைக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது தொடர்பாக, ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் பெயர்ப்பலகை முற்றிலும் தமிழில் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழில் பெயர்பலகை மேற்கண்ட 5:3:2 விகிதாச்சாரத்தில் வைக்காத கடைகள் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வர்த்தக வணிக நிறுவனங்கள் சட்டரீதியாக ஆய்வு மேற்கொண்டு வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

1 Comments

  1. முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைகள் ஒழுங்காக போடவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.