படகு குழாம் அமைக்கப்பட உள்ளது: மீமிசல் அருகே முத்துக்குடா சுற்றுலா தலத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு பணிகள் விரைவில் தொடக்கம்




படகு குழாமுடன் முத்துக்குடா சுற்றுலா தலத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

முத்துக்குடா

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் சுற்றுலா தலம் போன்று எதுவும் இல்லை. இதனால் முத்துக்குடா பகுதியில் சுற்றுலா தலம் படகு குழாமுடன் அமைக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் 8-ந் தேதி புதுக்கோட்டை வந்த போது பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அதில் முத்துக்குடா சுற்றுலா தலமும் ஒன்றாகும். இதைத்தொடர்ந்து சுற்றுலா தலம் அமைப்பதற்காக இடம் தேர்வு நடைபெற்றது. இதில் 10 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டன. படகு குழாமானது கடலில் அலையாத்தி காடுகளை சுற்றிப்பார்க்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

இந்த நிலையில் முத்துக்குடா சுற்றுலா தலத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் ரூ.3 கோடி நிதி சமீபத்தில் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் நடைபெற உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், `முத்துக்குடா சுற்றுலா தலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு விட்டது.

இனி அடுத்த கட்டமாக டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். சுற்றுலா தலத்தில் பூங்கா உள்பட பொதுமக்கள் தங்குவதற்கான வசதி உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். இதற்காக 10 ஏக்கர் பரப்பளவு நிலம் தயாராக உள்ளது' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments