இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கான கட்டணத்தை அரசு அந்த பள்ளிகளுக்கு செலுத்துகிறது.
இந்த நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதி தொடங்குகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 20-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அரசு இதற்கான முன்னேற்பாடுகளை செய்துவரும் நிலையில், தனியார் பள்ளிகள் இந்த திட்டத்தை தொடருவது பற்றி பரிசீலிப்போம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு கடந்த 2 ஆண்டுகளாக வழங்கவில்லை. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித் துறை தயாராகிவருவது அதிர்ச்சியளிக்கிறது. எனவே நிலுவை கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு விடுவிக்கவேண்டும். அப்படி இல்லையென்றால், 25 சதவீத இலவச சேர்க்கையை தனியார் பள்ளிகளில் தொடருவது பற்றி பரிசீலனை செய்யவேண்டிய நிலை வரும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.