R.புதுப்பட்டினம் TNTJ கிளை சார்பாக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிப்பு!




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் R.புதுப்பட்டினம் கிளை சார்பாக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் R.புதுப்பட்டினம் கிளை சார்பாக நேற்று 21.02.2023 அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து கிளை உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை  அளித்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
1.ஆர்.புதுப்பட்டினம் முஸ்லீம் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்,

2, டிஎன்டிஜே பள்ளிவாசல் அமைந்துள்ள தெருவிற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,

3. ஆர்.புதுப்பட்டிணம் தெரு முழுவதும் சாக்கடையாக காட்சியளிக்கிறது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் கழிவு நீர் கால்வாய் அமைத்து தர கோரியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments