புதுக்கோட்டை அருகே அரசுப்பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து - ஓருவர் பலி, 12 பேர் காயம்!
புதுக்கோட்டை அருகே அரசுப்பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 12 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கீழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ண சங்கர். இவர் தனது மகன், மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 10 பேருடன், காரில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இன்று காலை புதுக்கோட்டை சிப்காட் அருகே வெள்ளனூர் என்ற இடத்தில் சென்றபோது ஹரிகிருஷ்ண சங்கர் காரின் மீது எதிரே வந்த அரசுப்பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில ஹரிகிருஷ்ண  சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் காரில் இருந்த 1 வயது குழந்தை உள்பட 9 பேருந்தும், அரசுப்பேருந்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் ஒரு பயணி என 3 பேரும் என 12 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருகோகரணம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments