மன்னார்குடி பஸ் நிலைய கட்டுமான பணி: அனைத்து வழித்தட பஸ்களும் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கம்
மன்னார்குடி பஸ் நிலையம், பிரதான பஸ் நிலையம் மற்றும் சந்தப்பேட்டை பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்களையும் இணைத்து ரூ.27 கோடி மதிப்பீட்டில் நவீன பஸ் நிலையமாக புதிதாக கட்டப்பட உள்ளது. இந்த புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்காக பழைய பஸ் நிலைய கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் பழைய பஸ் நிலைய பகுதி அடைக்கப்பட்டுள்ளது. இங்கு இருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து வழித்தட பஸ்களும் தேரடி திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தற்காலிக பஸ் நிலையத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments