ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூர் அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்
ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணிதிட்டம் மற்றும் பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததானம் முகாம் கல்லூரி வளாகத்தில் நடத்தினர். கல்லூரி நிதியாளர் கண்ணன் தலைமை தாங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் ரமேஷ் வரவேற்று பேசினார். அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், கல்லூரி பேராசிரியர்களிடம் 60 யூனிட் ரத்தம் பெற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அளித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ஜீவரத்தினம் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments