அறந்தாங்கி வழியாக செல்லும் செகந்திராபாத் - இராமநாதபுரம் வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் 5 மணி நேரம் தாமதமாக அறந்தாங்கி வந்தது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை  அறந்தாங்கி காரைக்குடி வழியாக செகந்திராபாத்- இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்  இயக்கப்பட்டு வருகிறது 

செகந்திராபாத் - இராமநாதபுரம் 

செகந்திராபாத் -ராமேஸ்வரம்   (வண்டி எண் 07695) வாராந்திர   சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை தோறும் இரவு 9.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை திருவாரூர் (15.15),  திருத்துறைப்பூண்டி(15.58), அதிராம்பட்டினம் (16.34), பட்டுக்கோட்டை (16.50), .அறந்தாங்கி (17.50), காரைக்குடி (19.10) சிவகங்கை மானாமதுரை வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு இராமநாதபுரம் சென்றடையும்.

இராமநாதபுரம் - செகந்திராபாத் 

இதைப்போல மறுமார்க்கத்தில் இராமநாதபுரம் - செகந்திராபாத் (வண்டி எண் 07696) வாரந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9.50 மணிக்கு இராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு  மானாமதுரை சிவகங்கை காரைக்குடி (12.05), அறந்தாங்கி (12.29), பட்டுக்கோட்டை (13.13), அதிராம்பட்டினம்(13.29), திருத்துறைப்பூண்டி   (14.03), திருவாரூர் (15.15),‌ மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை  இரவு 9.50‌ மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது.

5 மணி நேரம் தாமதம் 

வண்டி எண் 07695 செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் புதன்கிழமை இரவு 11-10 மணிக்கு  சுமார் 120 நிமிடங்கள் காலதாமதமாக செகந்திராபாத் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதன் காரணமாக ரயில் பல மணி நேரம் தாமதம் ஆனது..

அறந்தாங்க்கு பிப்ரவரி 23 மாலை 5.50 மணிக்கு வர வேண்டிய ரயில் 5 மணி நேரம் தாமதமாக பிப்ரவரி 23 இரவு 11.00 மணிக்கு வந்து சேர்ந்தது. கடந்த இரு வாரங்களாக ரயில் தாமதமாக வருவதால்  ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்..

Aranthangi Schedule Time 05.50 PM (February 23 - Thursday)

Aranthangi Arrived Time - 11.10 PM (February 23 - Thursday)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments