கரோனா காலங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை




அறந்தாங்கி வட்டாரப் பகுதிகளில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறந்தாங்கி ஒன்றியப் பேரவைக் கூட்டத்தில், சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனையை அறந்தாங்கி வட்டார மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். அறந்தாங்கி ஒன்றியம் முழுவதும் பழுதடைந்துள்ள கிராமச் சாலைகளை உடன் செப்பனிட்டுத் தர வேண்டும். அறந்தாங்கி ஒன்றியம் முழுவதும் கரோனா காலங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்குவதுடன், பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, ஒன்றியப் பொருளாளா் கே. ஸ்டாலன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன், கீரமங்கலம் நகரச் செயலா் தமிழ்மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments