ஆவுடையார்கோவில் கடைவீதியில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆவுடையார்கோவில் கடைவீதியில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிட விவசாயிகளுக்கு உரமானியம் குறைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments