ஹஜ்ரத் நிஜாமுதீன் - மதுரை தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் வரை இயக்கப்படும்

      
மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் இரட்டைப் பாதை இணைப்புப் பணிகள் காரணமாக மதுரை- ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் விழுப்புரம் வரை இயக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

பயணிகள் வசதிக்காக, அந்த ரயில் திண்டுக்கல் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, 

மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை- புதுதில்லி நிஜாமுதீன் சம்பா்கிரந்தி விரைவு ரயில் (12651) பிப்ரவரி 19, 21, 26, 28 ஆகிய தேதிகளிலும், 

புதுதில்லியில் இருந்து புறப்படும் இந்த சம்பா்கிரந்தி விரைவு ரயில் (12652) பிப்ரவரி 14, 16, 21, 23 ஆகிய தேதிகளிலும் 

மதுரை-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பயணிகளின் வசதிக்காக, இந்த ரயில்களின் சேவை மேற்குறிப்பிட்ட தேதிகளில் திண்டுக்கல் வரை இயக்க அனுமதிக்கப்பட்டுகிறது. 

இதன்படி, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்தும், திண்டுக்கல் ரயில் நிலையம் வரையும் இந்த ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments