கோபாலபட்டினத்தில் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பொதுமக்கள் மற்றும் மார்க்கிஸ்ட் கட்சியுனரால் வருகிற பிப்ரவரி 22ம் தேதி மீமிசலில் காத்திருப்பு போராட்டம்
மீமிசலில் வருகிற பிப்ரவரி 22ம் தேதி உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து கோபாலபட்டிணம், அவுலியாநகர் மக்கள் 8,000 -க்கும் மேற்ப்பட்டடோர் தங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்து கோரிக்கை நிறைவேறும் வரை, ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் மார்க்கிஸ்ட் கட்சியுடன் இணைந்து நடத்தும்‌ காத்திருக்கும் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியாநகர் பகுதிகளில் மக்கள் வாழ முடியாத வகையில் சாக்கடை சாலையில் குளம் போல் தேங்கியும், குப்பை மலைபோல் குவிந்தும் சாலைகளில் பல்லமும் படுகுழியுமாய் மக்களின் வாழ்வாதரத்தை பாதித்து சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. இதனை சரிசெய்து தரக்கோரி பகுதி மக்கள் 10.01.2023 அன்று சாலை மறியல் போராட்டம் செய்த போது அரசு நிர்வாகம் கொடுத்த வாக்குறிதிகள் எதையும் நிரைவேற்றாத உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து கோபாலபட்டிணம், அவுலியாநகர் மக்கள் 8,000 -க்கும் மேற்ப்பட்டடோர் தங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்து கோரிக்கை நிறைவேறும் வரை, ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் மார்க்கிஸ்ட் கட்சியுடன் இணைந்து நடத்தும்

காத்திருக்கும் போராட்டம்,நாள்: 22.02.2023,இடம் : VAO அலுவலகம் மீமிசல்

நேரம்: காலை 10.00 மணி
 
இப்படிக்கு

CPI(M) மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் கோபாலபட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments