சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் "தேஜஸ்" விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்!


சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய "தேஜஸ்" விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து மதுரைக்கு வெறும் 6 மணி 30 நிமிடங்களில், சென்றடையும் அதிவேக ரயிலான தேஜஸ் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அதிநவீன வசதிகளுடன் இயக்கப்பட்டுவரும் இந்த ரயில், பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரயில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்தனர்.  

இதுதொடர்பாக தெற்கு இரயில்வேயின் மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திலும் சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கை விடுத்திருந்தார்.
சென்னைவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆன,சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (26.02.2023) ஆம் தேதி முதல் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments