தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் நகர கிளை 1 சார்பாக நடைபெற்ற சாதித்து காட்டுவோம் நிகழ்ச்சி!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் நகர கிளை 1 சார்பாக நடைபெற்ற சாதித்து காட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் நகர கிளை 1 சார்பாக 4/03/2023 அன்று மாவட்ட மர்க்கஸில் சாதித்து காட்டுவோம் நிகழ்ச்சி மாலை 5 மணி அளவில்  நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். கிளை பொருப்பாளர்கள் சையது மசூத், முகமது ஆசிப், அப்துர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ, மாணவிகள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, கடினமான பாடங்களில் இலகுவாக மதிப்பெண் பெறுவது எப்படி, பாடங்களை புரிந்து படிப்பது எப்படி, எளிதாக மனனம் செய்வது எப்படி, தேர்வு காலங்களில் பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கமாக சகோதரர் ரியாஸ் மற்றும் அஷ்ரப் அவர்கள் உரையாற்றினார். இதில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments