மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமையப் பயிற்சி!



மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமையப் பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நேற்று 04.03.2023 மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாஜிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி,     கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய குறுவள மையங்களில் எண்ணும் எழுத்தும் நடைபெற்றது.
இப்பியிற்சியில் ஒன்று முதல் மூன்றாவது வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் விளைவுகள் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடவாரியாக எழுத்துகள் அடையாளம் காணுதல், ஒலி உச்சரிப்பு, மொழி திறன் அறிதல் மற்றும் அடிப்படை கணிதம் அறிதல் போன்ற தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது. 
இப்பயிற்சியினை மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர்கள் செழியன், இந்திராணி மற்றும் மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். 
இப்பயிற்சியில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர் அங்கையர்கண்ணி பாரதி, அஸ்மா, பிரேமாலதா, ஜான் பீட்டர் மற்றும் ரோஸ்லின் ராணி ஆகியோர் செயல்பட்டனர்.

இப்பயிற்சியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன், வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments