திருச்சி: பறவை மோதியதால் கோலாலம்பூர் விமானத்தில் கோளாறு! 12 மணிநேரம் காத்திருந்த பயணிகள்!




கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானம் நேற்று இரவு 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. திருச்சியில் இருந்து மீண்டும் நள்ளிரவு 1.10 மணிக்கு புறப்பட்டு கோலாலம்பூர் செல்ல வேண்டும். ஆனால், கோலாம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வரும்போது வானில் பறந்து கொண்டிருக்கும்போது பறவை மோதியதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தரையிறங்கிய பிறகு விமானி தெரிவித்துள்ளார்.

ஆனால், அதன்பிறகு இதுவரை விமானம் புறப்படவில்லை. அதே விமானத்தில் பயணம் செய்ய இருந்த 178 பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் 12 மணி நேரமாக காத்திருக்கின்றனர். விமானம் விரைவில் புறப்பட தயாராகும் என திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த விமானம் பொதுவாக இரவு 11.40 மணிக்கு வந்து இறங்கி மீண்டும் இரவு 12 .10 மணிக்கு புறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து 4.15 மணிக்கு திருச்சியில் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு ஏர்ஏசியா விமானம் 178 பயணிகளுடன் புறப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments