சட்டவிரோத செயல்கள் தொடர்பாக செல்போனில் தகவல் அளிக்கலாம்: சமூக நல வாட்ஸ்-அப் குழுவை போலீசார் கண்காணிப்பு சூப்பிரண்டு தகவல்




சட்டவிரோத செயல்கள் தொடர்பாக செல்போனில் தகவல் அளிக்கலாம் எனவும், சமூக நல வாட்ஸ்-அப் குழு கண்காணிக்கப்படுவதாகவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் தினசரி புகார் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த 2 மாதங்களாக புதன் கிழமைதோறும் நடைபெற்று வரும் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாமில் ஏராளமான புகார்கள் பெறப்பட்டு, அந்தந்த காவல் நிலையத்திற்கு மனுக்கள் அனுப்பப்பட்டு தீர்வு காணப்படுகிறது. மேற்படி பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாமில் கொடுக்கப்பட்ட 272 புகார்களில் 265 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேற்படி பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாமில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். புகார்தாரருக்கு மனுவின் நடவடிக்கை மீது மனநிறைவுஉள்ளதா? என்பதை போலீஸ் சூப்பிரண்டு தொலைபேசி மூலம் புகார்தாரரிடம் தொடர்புகொண்டு கேட்கிறார். புகார்தாரருக்கு மனநிறைவு இல்லாத பட்சத்தில், துணை போலீஸ் சூப்பிரண்டு மூலம் நேரடியாக புகார் தொடர்பாக நடவடிக்கையில் ஈடுபட்டு தீர்க்கப்படுகிறது.

செல்போன் எண்கள்

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடக்கும் மணல் திருட்டு, கஞ்சா, லாட்டரி, சீட்டாட்டம், ரவுடிசம் போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் மாவட்ட போலீஸ் உதவி செல்போன் எண்கள்:94899 46674. 72939 11100 வாயிலாக புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கும், தனிப்படைக்கும் அனுப்பி மேற்படி புகார்கள் பற்றிய நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி முதல் இதுநாள் வரை மொத்தம் 2,485 புகார்கள் பெறப்பட்டு முதல் தகவல் அறிக்கை 291 மற்றும் மனு ரசீதாக 214 ஆக பதிவுசெய்யப்பட்டு சட்டபூர்வமாக தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் மாவட்டகாவல் உதவி எண்களானது 50-க்கும் மேற்பட்ட சமூக நல வாட்ஸ்-அப் குழுமத்தை கண்காணித்து வருகிறது. மேற்படி மாவட்ட காவல் உதவி எண்களில் புகார் தெரிவிப்போரின் விபரங்கள் ரகசியம் காக்கப்பட்டு வருகின்றது. மேற்கண்ட தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments