தலைநகர் சென்னையில் இருந்து இயங்கவிருக்கும் திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி இரயில் பாதையில் விரைவு இரயிலுக்கு "கும்மட்டித்திடல் சந்தானம் எக்ஸ்பிரஸ் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க கோரிக்கை
தலைநகர் சென்னையில் இருந்து இயங்கவிருக்கும் திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி  இரயில் பாதையில்  விரைவு இரயிலுக்கு "கும்மட்டித்திடல் சந்தானம் எக்ஸ்பிரஸ் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க கோரிக்கை

சுதந்திர போராட்ட வீரர் கும்மட்டிதிடல் சந்தானம்பெயரில் எக்ஸ் பிரஸ் ரயில் விடவேண்டும் என்று பய ணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர்பட்டுக்கோட்டை காரைக் குடி ரயில் பாதையில் சென்னையில் இருந்து இயங்கவிருக்கும் விரைவு ரயி லுக்கு கும்மட்டித்திடல் சந்தானம் எக்ஸ் பிரஸ் என பெயரிட்டு இயக்க வேண்டும் தமிழக அரசு சார்பில் அமரர் கும்மட்டிதிடல் சந்தானம் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். உதயமார்த்தாண்டபுரம்நாச்சிகுளம் கடைத் தெருவில் கள்ளுக்கடை மறியல் செய்த இடத்தில் அரசு சார்பில் அவருக்கு முழு உருவ சிலை அமைக்கவேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக் கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கம், மற்றும் தில்லைவிளாகம் "ரயில் பயணிகள் நல சங்க தலைவர் தாஹிர், செயலர்கள் பழனிவேல் விவேகானந்தம் இணைந்து மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

யார் இந்த கும்மட்டித்திடல் சந்தானம் ?

தென்னக இரயில்வே திருச்சி கோட்டம். சென்னையில் இருந்து, மயிலாடுதுறை,திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தில்லை விளாகம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி  இரயில் பாதையில்  இயக்கப்படும் விரைவு இரயிலுக்கு சுதந்திரப் போராட்ட வீரர் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் அமரர் கும்மட்டிதிடல் க. சந்தானம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கும்மட்டிதிடல் சந்தானம் எக்ஸ்பிரஸ் என பெயர் இட வேண்டுமாய்  கேட்டுக்கொள்கிறோம்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், கோட்டூர் ஒன்றியம், (தில்லைவிளாகம் இரயில் நிலையம்) அருகில் உள்ள கும்மட்டிதிடல் கிராமத்தில் 12.07.1895 ல் கும்மட்டிதிடல் க.சந்தானம் அவர்கள் ( கஸ்தூரி ரங்க சந்தானம் அய்யங்கார்) பிறந்தார்.

மன்னார்குடி பின்லே உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்.

சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

பிறகு அண்ணல் காந்தியடிகளின் கொள்கையை ஏற்றுக் கொண்டு இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு இந்தியாவின் விடுதலைப்போரில் ஈடுபட்டார்.

நமது பகுதியில் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட சாதி, மதம்  அரசியல் வேறுபாடுகள் இன்றி பாடுபட்டார். 

1920 ஆண்டு மாகாண அளவில் கைத்தறி பிரச்சாரத்தை நடத்தினார்.தொடர்ந்து கள்ளுக்கடை மறியல் இயக்கத்தையும் நடத்தினார்.‌கள்ளுக்கடை மறியலின்போது ஆங்கிலேய காவல்துறை யினர் க.சந்தானம் அவர்கள் தலையில் கள்ளுப்பானையை தலையில் வைத்து அந்த பானையை உடைத்து கள்ளை  உடல் முழுவதும் நனைய விட்டனர் .

14.04. 1930 ந்தேதி  மூதறிஞர் ராஜாஜி தலைமையில் திருச்சி யில் இருந்து புறப்பட்டு வேதாரண் யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு  9மாத சிறை தண்டனை பெற்றார். பஞ்சாபில் நபா  சமஸ்தானம் பிரிட்டிஷ் அரசால் இணைத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தடையை மீறிச் சென்று  போராட்டம் நடத்தினார்.
இதனால் சிறை தண்டனை பெற்றார் 

சுதந்திர போராட்டத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களையும் க. சந்தானம் அவர்களையும் ஒரே விலங்கில் பூட்டி எரவாடா   சிறையில் அடைத்தனர்.
உயரம் குறைந்த சிறைச்சாலை அறை.
தரையில் படுக்க ஈர சாக்குகள். 

இரவில் தூங்கும் போது முகத்தில் எலிகள் ஓடும் தொந்தரவு.‌ஒருவருக்கு இயற்கை உபாதை கழிக்கும்போது இருவரும் எழுந்து செல்ல வேண்டும்.இதுபோன்ற சிறை கொடுமைகளை இருவரும் அனுபவித்தனர்.இந்த சிறை தண்டனை அனுபவங்களை பண்டித ஜவஹர்லால் நேரு தன்னுடைய சுயசரிதையில் எழுதி உள்ளார்.

சந்தானம் அவர்கள் சிறையில் இருந்தபோது திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் வசித்து வந்த சந்தானம் அவர்களின் துணைவியார் எதிர்பாராமல் காலமாகி விட்டார்கள் .  அதிர்ச்சி அடைந்த  நிலையிலும் பரோலில் வெளிவர விரும்பவில்லை  தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.

1937 முதல் 1942 ஆம் ஆண்டு வரை இந்திய இம்பீரியல் சட்டமன்ற குழு உறுப்பினராக செயல்பட்டார்.

1946 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
 
இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு கர்மவீரர் காமராஜர் மூதறிஞர் ராஜாஜி அவர்களுடன் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்.

1948 ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் சுதந்திர இந்தியாவின் முதல் இரயில்வே இணை அமைச்சராக பணி புரிந்தார்.

 1952 ஆம் ஆண்டு விந்திய பிரதேசத்தின் கவர்னராக பணியாற்றினார்

1962ல் இந்திய நாட்டில் ஊழலை ஒழிப்பது குறித்து இந்திய அரசுக்கு பரிந்துரை வழங்கும் குழுவிற்கு தலைவராக பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இவரை நியமித்தார்.

1964ல் இந்த குழுவின் ஆலோசனைப்படி மத்திய விழிப்புணர்வு ஆணையம் (சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன்)
அமைக்கப்பட்டது

1976 ம் ஆண்டு சந்தானம் கமிட்டி பரிந்துரைப்படி இந்திய அரசில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நடத்தை விதிகள் ( code of conduct) அமைக்கப்பட்டது .

சிறந்த பத்திரிகையாளர்.
 
1933 -1940 வரை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் முதல் தலைமை ஆசிரியராகவும் 1943-1948 வரைஇந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் இணை ஆசிரியராகவும்  பணியாற்றினார்.

சுதந்திர போராட்ட வீரர் கும்மட்டிதிடல் க சந்தானம் அவர்கள் 28.02.1980 ந்தேதி இயற்கை எய்தினார்கள் 

தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

காந்தியம், சட்டம், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் போன்ற தலைப்புகளில் 20 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

 பிரிட்டிஷ் இரயில்வே யின் தனியார் நிறுவனங்களை நாட்டு உடமையாக்கினார்.   

அறந்தாங்கி- காரைக்குடி மீட்டர் கேஜ் பாதை இவரது முயற்சியால் போடப்பட்டது.

தில்லைவிளாகம் ரயில் நிலையத்தில் க.சந்தானம் அவர்கள் தங்குவதற்கு முதல் வகுப்பு ஓய்வறை இருந்தது.

அகல இரயில் பாதை அமைக்கும் பணிகளின் போது இந்த ஓய்வறை அகற்றப்பட்டது.

இந்த இரயில் நிலையத்தை இரயில்வே நிர்வாகம் நினைவு சின்னமாக அமைத்திருக்கலாம் .

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெறும் இந்த காலத்தில், சுதந்திர போராட்ட தியாகியான அன்னாரது தேச சேவையை  போற்றும் வகையில் திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி  இரயில் பாதையில்  சென்னையில் இருந்து இயங்கவிருக்கும் விரைவு இரயிலுக்கு "கும்மட்டித்திடல் சந்தானம் எக்ஸ்பிரஸ்" என பெயர் இட்டு இயக்க வேண்டும் எனவும், தில்லைவிளாகம் இரயில் நிலையத்தில் அமரர் கும்மட்டிதிடல் க சந்தானம் அவர்களின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என  மாண்புமிகு இரயில்வே அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

தமிழக அரசு சார்பில் அமரர் கும்மட்டிதிடல் க.சந்தானம் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

உதயமார்த்தாண்டபுரம்-நாச்சிகுளம் கடைத்தெருவில் கள்ளுக்கடை மறியல் செய்த இடத்தில் அரசு சார்பில் அவருக்கு முழு உருவ சிலை அமைக்கவேண்டும்.

இப்பகுதியில் உள்ள கல்லூரி பள்ளிக்கூடங்களில் இவருடைய பிறந்த நாள் அன்று தேச பக்தி நேர்மை தியாகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு சார்பில் நடத்த வேண்டும் .

நமது பகுதியில் தோன்றி நம்நாட்டு மக்களுக்காக பாடுபட்ட மாபெரும் மனிதரை போற்றுவோம்.

உதயமார்த்தாண்டபுரம். வ. விவேகானந்தம், செயலாளர், பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம். 

நாச்சிகுளம்.             ஜெ. தாஹிர்,  தலைவர், தில்லைவிளாகம் ரயில் பயணிகள் நல சங்கம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments