10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற ஆதார் எண்ணை புதுப்பிக்க வேண்டுகோள்





10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற ஆதார் எண்ணை புதுப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.




ஆதார் எண்

அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு ஆதார் அவசியமாகிறது. இதில் 2012 முதல் 2016-ம் ஆண்டு வரையில் ஆதார் எண் பெற்றவர்களிடமிருந்து எந்தவொரு ஆவணங்களும் உடன் பதிவு செய்யப்படவில்லை. எனவே திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதில் தவறுகளை களைவதற்கு சமீபத்திய தனிப்பட்ட விவரங்களுடன் ஆதார் தரவுகளை பொதுமக்கள் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆதார் அட்டை தரவுகளை சரி பார்ப்பதில் எந்த சிரமமும் ஏற்படாத வகையில் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் இருப்பிட விலாசங்களை புதுப்பிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இணையதளம்

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையை பெற்று அதன் பிறகு எந்த ஒரு ஆவணங்களையும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாமல் உள்ளவர்கள், தகுந்த ஆவணங்களை பயன்படுத்தி புதுப்பிக்க வேண்டும். இது தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட சேவை கட்டணத்துடன் ஆதார் அட்டையை புதுப்பிக்கும் வசதியினை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் வழங்கியுள்ளது.

"My Aadhaar Portal" 
 
என்ற இணையதளம் வாயிலாக அல்லது அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் மூலமாக புதுப்பிக்கலாம்.

மேலும், 2012 முதல் 2016-ம் ஆண்டுகளுக்குள்ளாக ஆதார் எண் பெற்றவர்கள், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் என ஏதாவது ஒரு ஆவணத்தை பயன்படுத்தி தங்களின் ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments