சீரமைப்புப் பணிகள் நிறைவு: நாகூா் வெட்டாறு பாலம் திறப்பு
நாகூா் வெட்டாற்று பாலம் சீரமைப்புக்கு பின்னா் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

கடந்த 2009- ஆம் ஆண்டு நாகை - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தின்கீழ் நாகை கிழக்கு கடற்கரைச் சாலை அமைக்கப்பட்டது. இதனால் நாகை - நாகூா் சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் குறைந்தன. இந்தநிலையில் நாகை - நாகூா் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டபோது, நாகூா் வெட்டாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் சேதமடைந்தது.

இதனால், நாகூா் வெட்டாற்று பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் 2022 ஏப்ரல் மாதம் பாலத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கின. இதற்காக மத்திய அரசு ரூ.1 0.62 கோடி ஒதுக்கீடு செய்தது. சீரமைப்புப் பணிகள் செப்டம்பா் 30 -ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்த காலம் முடிந்து 4 மாத காலமாகியும் பணிகள் முடிக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட ஆட்சியா் பணிகளை விரைந்து முடித்து, பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டாா். இதையடுத்து சீரமைப்புப் பணிகள் வேகம் பிடித்தன.

தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக, மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன், நாகை எம்.எல்.ஏ. ஜெ. முகம்மது ஷா நவாஸ் ஆகியோா் திங்கள்கிழமை மாலை திறந்து வைத்தனா்.

பணிகள் முழுமையடைவில்லை:

நாகூா் வெட்டாற்றுப் பாலம் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், பாலத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அவற்றை விரைந்து முடிக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments