திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய கட்டுமான பணி செப்டம்பர் மாத இறுதியில் நிறைவு பெறும் விமான நிலைய இயக்குனர் பேட்டி




திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய கட்டுமான பணி செப்டம்பர் மாத இறுதியில் நிறைவுபெறும் என விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார்.

கூடுதல் சரக்குகள்

திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

திருச்சி விமான நிலையத்தில் நாளொன்றுக்கு 20 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்படுகிறது. கடந்தாண்டு 1.72 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை 1.03 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக சரக்குகள் கையாள வாய்ப்புள்ளது.


மும்பைக்கு புதிய விமானங்கள்

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனைய கட்டுமான பணி வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு பெறும். தற்போது டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மும்பைக்கு புதிதாக விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை செயல்பாடுகளில் குறைகள் உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. விரைவில் குறைகள் களையப்படும். விமான ஓடுதள விரிவாக்க பணிகளுக்காக 345 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு தற்போது வரை 41 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments