இன்று முதல் மதுரை ரயில் நிலையம் வழியாக வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம்
இன்று முதல் மதுரை ரயில் நிலையம் வழியாக வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில்பாதை இணைப்பு பணிகள் மார்ச் மாதம் 7ம் தேதி வரை நடைபெற்றதால் பல ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது.

இதன் காரணமாக பல்வேறு ரயில்கள் பகுதி தூரம் ரத்தும் செய்யப்பட்டன. சில ரயில்கள் மதுரை செல்லாமல், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில்பாதை இணைப்பு பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, இன்று முதல் மதுரை ரயில் நிலையம் வழியாக வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments