சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுப்படி தொண்டியில் நுாலக கட்டடம் அகற்றம்




சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுப்படி, தொண்டியில் சேதமடைந்த பழைய நுாலக கட்டடம் இடிக்கபட்டது. அவ்விடத்தில் புதிய கட்டடம் கட்டித்தர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொண்டியில் 1998ல் பொதுமக்கள் பயன்படும் வகையில் நுாலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.கட்டடம் சேதமடைந்ததால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நுாலகம் மாறுதல் செய்யபட்டது. பழைய நுாலக கட்டடம் பழுதாகி இடியும் அபாயம் ஏற்பட்டது. அக் கட்டடத்தில் சிலர் இரவில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தொண்டியை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வக்கீல் அணி துணை செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது, உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் சேதமடைந்த நுாலக கட்டடத்தை இடித்து விட்டு புதிய நுாலக கட்டடம் கட்டவேண்டும், என்று கூறியிருந்தார். விசாரணை செய்த நீதிபதிகள் கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.

இதன்படி நேற்று முன்தினம் நுாலக கட்டடம் இடிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments