புதுக்கோட்டை நகரில் முதல் கட்டமாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது




புதுக்கோட்டை நகரில் முதல் கட்டமாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. விரைவில் இந்த கேமராக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள்

புதுக்கோட்டை நகரில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் இவற்றில் பல செயல்படாமல் உள்ளன. மேலும் முக்கிய சந்திப்பு சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருந்தன. இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டை நகர் முழுவதும் மற்றும் புதுக்கோட்டைக்குள் நுழைவு மற்றும் வெளியே செல்லக்கூடிய முக்கிய சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. தற்போது முதல் கட்டமாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பெருமளவு பணிகள் நிறைவடைந்த நிலையில் விரைவில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

கட்டுப்பாட்டு அறை

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய வீதிகளான கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதிகளிலும், பழைய பஸ் நிலையம் முதல் அரிமளம் விலக்கு வரையும், புதிய பஸ் நிலையம் செல்லக்கூடிய சத்தியமூர்த்தி சாலை, மாலையீடு, அண்டகுளம், கட்டியாவயல், கருவேப்பிலான் ரெயில்வே கேட், கேப்பரை, மேட்டுப்பட்டி உள்பட முக்கிய சந்திப்புகள், சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதில் 100 கேமராக்கள் பொருத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த சோதனை முடிந்ததும் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டிற்கு வரும். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்படுகிறது. அதில் இருந்து போலீசார் கண்காணிப்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments