புதுக்கோட்டை சிப்காட்டில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திப்பு பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்




சிப்காட்டில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே சந்தித்து பேசினார். மேலும் அவர்களது பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

வடமாநில தொழிலாளர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட சிப்காட்டில் கடந்த ஒரு வருடமாக 200-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தும், அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தினார். மேலும் அவர்களுக்கு ஏதேனும் புகார்கள் இருக்கும் பட்சத்தில் மாவட்ட காவல் உதவி எண் 9489946674-ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

போலீசார் அறிவுரை

ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக்ரஜினி, கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? என்று கேட்டனர். அப்போது வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினையில்லாமல் வேலை செய்கிறோம். யாரும் எங்களுக்கு தொந்தரவு கொடுக்கவில்லை என்றனர். உங்களுக்கு யாரேனும் இடையூறு செய்தாலோ அல்லது பிரச்சினை செய்தாலோ அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளில் யாரும் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறினார்கள். இதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments