கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த பள்ளிவாசல்கள் சீரமைப்பு பணி நிறைவு! ஊர் ஜமாத்திடம் GPM பள்ளி சீரமைப்பு குழு கணக்கு ஒப்படைப்பு!!
கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த பள்ளிவாசல்கள் சீரமைப்பு பணி நிறைவு பெற்ற நிலையில் GPM பள்ளி சீரமைப்பு குழுவினர் ஊர் ஜமாத்திடம் வரவு, செலவு கணக்குகளை ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பள்ளிவாசல்கள் சீரமைப்பு பணியை GPM பள்ளி சீரமைப்பு என்ற பெயரில் ஜனாப்.RSM.அன்சாரி அவர்களின் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு நேற்று 10.03.2023 வெள்ளிக்கிழமை ஜூம்மா-விற்கு பிறகு பொதுமக்கள் முன்னிலையில் ஊர் ஜமாத்தாரிடம் வரவு, செலவு கணக்குகளை GPM பள்ளி சீரமைப்பு குழுவினர் ஒப்படைத்தனர்.மேலும் கணக்குகளை ஒப்படைக்கும் போது ஊர் ஜமாத்திற்கு கடிதம் ஒன்றை கொடுத்தனர்.

அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது, 
மகாகணம் மேன்மை தாங்கிய கோபாலப்பட்டிணம் ஜமாத் சமூகத்திற்கு GPM பள்ளி சீரமைப்பு குழுவின் கனிவான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் நமது ஊர் பள்ளிவாசல்களின் மராமத்து வேலைகளை செய்வதற்காக ஜனாப்.RSM அன்சாரி அவர்களின் தலைமையில் ஜமாத் கமிட்டி இருக்கின்ற பொழுது ஏற்பாடு செய்யப்பட்டு தன்னார்வலராக 5 பேர் சேர்ந்து GPM பள்ளி சீரமைப்பு குழு என்ற பெயரில் இந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தோம். அதில் ஒருவரால் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில் நான்கு பேர் மட்டும் தொடர்ந்து பணி செய்து வந்தோம்.

இறைவனின் மிகப்பெரும் கிருபையுடன் தாராள மனம் கொண்ட பெருமக்களின் பொருளாதார உதவியுடன் ஜனாப் KNN.லியாக்கத்தலி அவர்களின் தலைமையில் இருந்த கமிட்டி மற்றும் தற்போதைய ஜமாத் நிர்வாகத்தின் தலைவர்கள் ஜனாப்.OSM.முகமது அலி ஜின்னா, ASM.செய்யது முகமது மற்றும் அனைத்து நிர்வாகிகள், கமிட்டியாளர்கள், அல் வின்னர் சங்கத்தினர் அனைவருடைய துணையுடன் சுமார் இரண்டரை வருடங்களாக மறு சீரமைப்பு வேலைகள் நடைபெற்று தற்போது நிறைவடைந்து விட்டது. மேலும் சில வேலைகள் பாக்கி இருந்தாலும் அவற்றைப் பிறகு செய்யலாம் என்கின்ற அடிப்படையில் இதுவரை செய்யப்பட்ட வேலைகளின் வரவு-செலவு விபரங்களை நமது ஊர் ஜமாஅத் வசம் ஒப்படைக்கின்றோம். எங்களால் முடிந்தவரை பொறுப்புடனும், சிக்கனமாகவும், தொலைநோக்குடன் இந்த வேலைகளை முன்னின்று செய்திருக்கின்றோம். அதில் திருப்தியும், அதிருப்தியும் இருக்கலாம். மேலும் குறை, நிறைகளும் இருக்கலாம். எனவே எல்லாவற்றையும் பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டு எங்களுக்காக துவா செய்யுங்கள். இத்துடன் வரவு செலவு கணக்குகள் விபரங்கள் மற்றும் பள்ளி சீரமைப்பு குழு உண்டியலின் சாவியும் ஜமாத்தின் மேலான சமூகத்தில் ஒப்படைக்கின்றோம். இவ்வாறாக அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்படிக்கு...
  • ஹாஜி.RSM.முகம்மது அன்சாரி த/பெ முகைதீன் பக்கீர்
  • ஹாஜி.KMS.கலந்தர் த/பெ KM சேக் தாவூத்
  • V.E.உமர்கத்தா த/பெ இப்ராம்சா
  • ஹாஜி.KM.முகம்மது பாக்கர் த/பெ முகைதீன்

தகவல்: ஹாஜி.RSM.முகம்மதுஅன்சாரி, GPM பள்ளி சீரமைப்பு குழு, கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments