ஆவுடையார்கோவிலில் மதுபிரியர்களின் கூடாரமாக மாறும் பயணிகள் நிழற்குடை பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
ஆவுடையார்கோவிலில் பஸ் பயணிகளின் நலனுக்காக ரூ.13 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள் பயணிகள் நிழற்குடை முன்பு சரிவர நிறுத்துவது இல்லை. இதனால் அந்த நிழற்குடை தற்சமயம் மதுபிரியர்களின் கூடாரமாகவும், அவர்கள் தங்கும் விடுதியாகவும் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆவுடையார்கோவில் கடைவீதியில் பஸ்கள் நின்று செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை முன்பு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments