தமிழ்நாட்டில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; விவரங்கள் உள்ளே விண்ணப்பிப்பது எப்படி?

போட்டி தேர்வுக்கு தயாராகும்  தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், இலவச பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழகத்தில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க உள்ளதாக, சமீபத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்ட தகவல் பின்வருமாறு:

டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி, வங்கித் தேர்வு, ஆர் .ஆர்.பி ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தமிழக அரசு சார்ப்பில் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரியிலும், நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பயிற்சியில் சேர விரும்புவோர் www.civilservicecoaching.com என்ற இணையதளத்திற்கு  சென்று விண்ணபிக்கவும். இன்று முதல் அதாவது மார்ச் 15 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118, 8667276684,  8489334419 தொலைபேசி எண்களை தொடர் கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்பைடையில்  பயிற்சிக்கு நபர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகும். ஏப்ரல் 10-ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments