மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மையங்களின் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான கூட்டம் மற்றும் வாசகம் எழுதுதலில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா
மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மையங்களின் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான கூட்டம் மற்றும் வாசகம் எழுதுதலில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி

 மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களின்  தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான கூட்டத்தினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு செழியன் அவர்களின் தலைமையில்  தொடங்கியது.

மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

 இந்நிகழ்வில் 
புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கு வருகின்ற மார்ச் 19  அன்று தேர்வு நட இருப்பதினால் அனைத்து தலைமை ஆசிரியர்களும் தேர்வினை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டும் என்றும் ,

மேலும் புதிய பாரத தன்னார்வலர்களுக்கு ஸ்லோகன் எழுதுதல் போட்டியில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு  
முதல் பரிசு  
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வடக்கு அம்மா பட்டினம்  மீனவர் காலனி மையத்தை சேர்ந்த தன்னார்வலர் சந்தியா  1000 ரூபாய் ரொக்கம் பரிசும் மற்றும் இரண்டாம் பரிசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பொன்னகரம் மையத்தை சேர்ந்த தன்னார்வலர் மகா 750 ரூபாய் ரொக்கம் பரிசும் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை சேர்ந்த 36 தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள்  முத்துராமன் வேலுசாமி அங்கையர் கன்னி மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்  கண்ணன் அவர்களும் கலந்து கொண்டனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments