தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்.. தப்பிக்க உதவும் வழிகள் – சுகாதாரத்துறை வெளியீடு!




தமிழகத்தில் கடந்த மாதம் வரை மழை பெய்து வந்த நிலையில், தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது. மேலும் வெயில் கால நோய்களில் இருந்து பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது

கோடை வெயில்
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடைகாலம் தொடங்கிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் வரை மழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன் படி தமிழகத்தில் உச்சி வெயில் நேரமான மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வெயில் அதிகமாக இருக்கும் போது வெளியே வர வேண்டாம் எனவும், வீட்டிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் வெயில் கால பாதிப்புகளான உடல் சூடு, வாந்தி, மயக்கம், தலைவலி, தலைசுற்றல், தோலில் எரிச்சல் ஆகியவை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் எனவும், வெளியில் செல்ல உடலை மறைக்கும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெயில் அதிகமாக இருப்பதால் பக்கவாதம், இறப்பு ஆகியவை ஏற்படுவது குறித்து தினமும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments