20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் புதுக்கோட்டை திலகர் திடலில் உண்ணாவிரதம்




தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் ரெங்கராஜன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரிய, ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரெங்கராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்களை தற்போது பள்ளி கல்வித்துறை அமல்படுத்தி வருகிறது. இதனால் தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறதா? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதிய உயர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம், என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments