சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே ஊருணியில் மூழ்கி 2 சிறுவர்கள்-சிறுமி சாவு கிராமமே சோகத்தில் மூழ்கியது
குளிக்க சென்ற இடத்தில் ஊருணியில் மூழ்கி அண்ணன்-தம்பியான 2 சிறுவர்களும், சிறுமியும் உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

குளிக்க சென்றனர்

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள உலகம்பட்டி ஊராட்சி படமிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன்கள் மகேந்திரன் (வயது 7), சந்தோஷ் (5). இதில் மகேந்திரன் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பும், சந்தோஷ் அங்கன்வாடியிலும் படித்து வந்தனர்.

அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் மகள் யாமினி என்ற மீனாட்சி (10). இவள் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று மேற்கண்ட சிறுவர்கள், சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். விடுமுறை தினம் என்பதால் மகேந்திரன், சந்தோஷ், மீனாட்சி ஆகியோர் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். மதிய நேரத்தில் அதே பகுதியில் உள்ள செட்டி ஊருணிக்கு குளிக்க சென்றனர்.

தண்ணீரில் மூழ்கி சாவு

ஊருணியில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால், மகேந்திரன், சந்தோஷ், மீனாட்சி ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.


இதற்கிடையே அங்கு ஆடு, மாடு மேய்க்க வந்தவர்கள் ஊருணியில் 3 பேரின் உடல்கள் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக 3 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

கிராமமே சோகத்தில் மூழ்கியது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி மற்றும் உலகம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுவர் சிறுமியின் பெற்றோரும், உறவினரும் அங்கு வந்து, 3 பேரின் உடல்களை பார்த்து கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி மற்றும் அண்ணன்-தம்பியான 2 சிறுவர்கள் ஊருணியில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments