62 கிலோமீட்டர் தூரத்தை படகில் நின்று துடுப்பு போட்டு சாதனை படைத்த வீரர்




ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை சாதனை படைப்பதற்காக சென்னை ட்ரிப்ளிகேன்ட் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 49). கடந்த 17-ந்தேதி அன்று காலை 10.20 மணியளவில் புறப்பட்டார். அரிச்சல் முனையிலிருந்து படகில் நின்று கொண்டே துடுப்பு செலுத்தி தலைமன்னாருக்கு புறப்பட்ட இவர் மாலை 5 மணியளவில் தனது சாதனை பயணத்தை நிறைவு செய்தார். தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இருந்து படகில் நின்று கொண்டே துடுப்பு போட்டு தலைமன்னார் ஊர்முனை வரை 31 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 45 நிமிடத்தில் சென்று சாதனை படைத்துள்ளார்.

இதேபோல் மீண்டும் தலைமன்னார் ஊர்முனை கடல் பகுதியில் இருந்து நேற்று காலை 6 மணியளவில் படகில் நின்றபடியே துடுப்பு போட்டு தனது சாதனை பயணத்தை தொடங்கி 5 மணி நேரம் 30 நிமிடத்தில் அதாவது காலை 11.30 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை வந்து தனது பயணத்தை நிறைவு செய்தார். தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இருந்து தலைமன்னார் வரை சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு அரிச்சல் முனை வரை படகில் நின்று துடுப்பு போட்டு 62 கிலோமீட்டர் சாதனை படைத்துள்ளார்.

 இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நீச்சல் வீராங்கனை சுஜேத்தாதேப் பர்மன் (40) கடந்த 15-ந் தேதி தனுஷ்கோடியில் இருந்து மாலை 4.45 மணியளவில் தலைமன்னார் நோக்கி நீந்த தொடங்கியுள்ளார். 12 மணி நேரம் 15 நிமிடத்தில் தலைமன்னார் சென்றடைந்த இவர் அங்கு இரவு படகிலேயே ஓய்வெடுத்து விட்டு மீண்டும் 16-ந் தேதி அதிகாலை 5 மணியளவில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி நோக்கி நீந்த தொடங்கி அன்று மதியம் 12.20 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை வந்தார். 62 கிலோமீட்டர் தூரத்தை 19 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி இவர் சாதனை புரிந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments