திருச்சி, விழுப்புரத்தில் இருந்து திருவாரூருக்கு சிறப்பு ரெயில்கள்




ஆழித்தேரோட்டத்தையொட்டி திருச்சி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவாரூருக்கு சிறப்பு  ரெயில்வே இயக்கப்படுவதாக திருச்சி ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ஆழித்தேரோட்டத்தையொட்டி திருச்சி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவாரூருக்கு சிறப்பு  ரெயில்வே இயக்கப்படுவதாக திருச்சி ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் வருகிற 1-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டத்தை காண திருவாரூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த மற்றும் வெளி மாநில பக்தர்கள் திருவாரூருக்கு வருவது வழக்கம்.

சிறப்பு ரெயில்கள்

இவர்களின் போக்குவரத்து வசதிக்காக தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் சார்பில் விழுப்புரம் மற்றும் திருச்சியில் இருந்து சிறப்பு  ரெயில்வே இயக்கப்படும் என அறிவிக்கப்ட்டு உள்ளது.

அதன்படி வருகிற 31-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மயிலாடுதுறைக்கு வந்து, அங்கிருந்து 9.20 மணிக்கு புறப்பட்டு பேரளம், பூந்தோட்டம், நன்னிலம் வழியாக 10.20 மணிக்கு திருவாரூர் வருகிறது. மறுநாள் காலை 5 மணிக்கு திருவாரூரில் இருந்து ரெயில் புறப்பட்டு கிளம்பி 9.05 மணிக்கு விழுப்புரத்துக்கு சென்று சேருகிறது.

திருச்சி - திருவாரூர்

1-ந் தேதி(சனிக்கிழமை) காலை திருச்சியில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் ரெயில் பொன்மலை, திருவரம்பூர், பூதலூர், தஞ்சை, சாலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி வழியாக திருவாரூருக்கு 11.40 மணிக்கு வந்து சேர்கிறது. மறுமார்க்கமாக மாலை 3.40 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு மாலை 6.05 மணிக்கு திருச்சியை சென்றடைகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments